ரொறொன்ரோவில் பட்டப்பகலில் இளைஞருக்கு நேர்ந்த துயரம் !

கனடாவின் ரொறொன்ரோ நகரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொறொன்ரோவில் Regent Park பகுதியில் செவ்வாய் அன்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர் குற்றுயிராக கிடந்த இளைஞரை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சம்பவயிடத்திலேயே இளைஞர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட இளைஞர் 13 முதல் 19 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என ரொறொன்ரோ மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.