Canada

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீட்டு விலை உயர்வு?

ரொறொன்ரோ-கடந்த மாதம் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வீட்டு சந்தை உயரத் தொடங்கியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னய நிலையுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 8.5சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

ஆகஸ்ட் மாதம் 6,839-வீடுகள் MLS system-ஊடாக விற்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது. சராசரி விற்பனை விலை கூட 4.7சதவிகிதம் அதிகரித்து 2017 ஆகஸ்ட் மாதத்திலிருந்து $730,969லிருந்து $765,270 ஆக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் புதிய பட்டியலிடுகையில் உயர்வை கொண்டு வந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 12,166 புதிய பட்டியலிடுகைகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முந்தயதை விட 6-சதவிகிதம் 11,481 அதிகமாகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top