ரொறொன்ரோ மேயர் தேர்தல்: தீவிர நேரடி பிரசாரத்தில் வேட்பாளர்கள்!

ரொறொன்ரோவில் வரவிற்கும் மேயர் தேர்தலையொட்டி, அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரொறொன்ரோவில் மேயர் தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நடைபெற விருக்கிறது.அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் தீவிரமாக மேற்க்கொள்ளவுள்ளனர்.
அதன் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சாரத்தில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் பிரச்சாரத்தில், ரொறொன்ரோ நகருக்கான கலை பண்பாட்டு விழுமியங்கள், சமத்துவம், வளர்ச்சி, வாழ்வதற்கு ஏதுவான சூழல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இவர்களுடன் மேயர் பதவிக்கு போட்டியிடுவோரில், சரோன் கெப்பிரசெலாசி, கெளதம் நாத், சாரா கிளைமென்ஹாகா ஆகியோரும் இநத் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.