News

லண்டனில் இளைஞரை கொன்று சடலத்தை வீட்டில் மறைத்த தம்பதி கைது!

லண்டனில் என்பீல்ட் பகுதியில் கத்திக் குத்து காயங்களுடன் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குறித்த இளைஞர் கடந்த 8 மாதங்களாக பெற்றோரால் தேடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. 18 வயதான அப்தி அலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி குடும்ப திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதே மாதம் 31 ஆம் திகதி அவர் மாயமானதாக பொலிசாருக்கு பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீண்ட 8 மாதங்களுக்கு பின்னர் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்து மிக மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் அலியின் சடலம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. உடற்கூறு சோதனையில் குறித்த இளைஞர் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், தலையில் சக்தியாக தாக்கப்பட்டதாலும், மார்பில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதாலும் மரணம் நேர்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் அப்தி அலியின் பெற்றோர்கள் மாயமான மகனை மீட்டுத்தரும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். வடக்கு லண்டனில் உள்ள Hartmoor Mews பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட பொலிசார், அங்குள்ள பரண் ஒன்றில் மறைக்கப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த குடியிருப்பில் குடியிருக்கும் Gary Hopkins(36) மற்றும் Stacey Docharty(28) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிந்துள்ள பொலிசார், Highbury Corner நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top