வருடாந்த மார்க்கம் பன்முக பல்கலாச்சார விழா நாளை மார்க்கம் ஆனின் சமூக மைய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

வருடாந்த மார்க்கம் பன்முக பல்கலாச்சார விழா நாளை மார்க்கம் ஆனின் சமூக மைய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
மோக்க்ஷா கனடா அறக்கட்டளையின் ஊடாக பல் கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் உலகளாவிய உணவு வகைளை கொண்ட சாவடிகள், எமது சமூகத்தில் மக்களுக்கு சேவை புரியும் பலரின் சாவடிகள் என இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் குறித்த விழா தொடர்பிலான அறிமுக நிகழ்வு ஸ்கார்பரோவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு அனுசரனை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
தமிழர் தரப்பில் Apex Creation, Remax Community Realty Inc, Brokerage ஆகிய நிறுவனங்கள் இந்த நிகழ்வுக்கு அனுசரனை வழங்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.