News

விடுதலைப் புலிகளை தோற்கடித்த படையினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்! ஐ.நாவில் சரத் வீரசேகர

இலங்கையில் விடுதலைப்புலி பயங்கரவாதிகளை தோற்கடித்த இராணுவத்தினர் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் முக்கிய இராணுவ அதிகாரிகளும் அடங்குவதாகவும் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்வதற்கான வீசா அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு எதிராக போர் குற்றங்களோ ஏனைய குற்றச்சாட்டுக்களோ சுமத்தப்படவில்லை. இவர்கள் தமது தாய் நாட்டை காக்க போராடியவர்கள்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைந்து கொள்ள உள்ள இராணுவத்தினருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்னும் நற்சான்றிதழை வழங்கவில்லை.

இவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த நற்சான்றிதழை பெற காத்திருக்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதே இவர்கள் செய்த ஒரே குற்றம்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட போதிலும் இலங்கையர்களான எம்மை போல் நடத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest News

To Top