India

விறுவிறுப்பாகும் தமிழகம்! 24 மணித்தியாலத்திற்குள் விடுதலையாகும் 7 தமிழர்கள்?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு தற்போது தமிழக அரசில் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வரலாற்றில் அதிக வருடம் சிறைவாசம் அனுபவித்துவரும் சாந்தன், நளினி, மற்றும் முருகன் உள்ளிட்ட குறித்த ஏழு தமிழர்களின் விடுதலையை எதிர்நோக்கி, சமூக மற்றும் அரசியல் நிலவரங்களைத்தாண்டி, பல்வேறு தரப்பினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் பிராயோகித்து வந்தனர்.

தற்போது வெளியாகி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசின் முடிவை நோக்கி அனைவரையும் திசைத்திருப்பியுள்ளது. மேலும், குறித்த ஏழு தமிழர்களின் விடுதலை எக்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளது, உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள சவால்களை எவ்வாறு சாதிக்கப்போகின்றது என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top