ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் படுகாயம்!

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், நேற்று பிர்ச்மவுண்ட் வீதி மற்றும் லாரா செளகாரட் வாக் அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசரணைகளை ரொறொன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்