2 மில்லியன் கனேடிய டொலர் மோசடியில் முன்னாள் மேலாளர் கைது!

உள்ளூர் வணிகத்தில் சுமார் 2 மில்லியன் கனேடியன் டொலர்கள் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 2017 ஆம் ஆண்டு குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பில் அறிக்கையைப் பெற்ற பின்னர், பொலிஸார் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு குறித்த உள்ளூர் வணிகத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஜோயல் பிரையன் கண்டெர்சன் என்ற 48 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் மீது 5000 டொலரை மோசடி செய்ததாகவும், 5000 டொலரை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மேலாளரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.