News

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

 

சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள பொது அமைப்புகள் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மாவட்ட செயலக முன்றலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகுமெனவும் கூறப்படுகின்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நல்லாட்சி அரசை விட்டு வெளியேற முடியுமா? மக்கள் பிரதிநிதிகளே பதில் சொல்ல முடியுமா?’, ‘பதவியை காப்பாற்ற நினைவோர்களே, மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிப்பது இல்லை’, ‘எதிர்க்கட்சி தலைவர் இதுவரை செய்த இராஜதந்திரம் என்ன? இழுத்தடிப்பு தீர்வா? சிறையில் வாழும் நிலையில்’ போன்ற பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top