
ஒன்ராறியோ மாகாண பொலிசார் ஒட்டாவா நெடுஞ்சாலை 417ல் மரணமடைந்த மனிதனை அடையாளம் காண அபூர்வமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் கடுமையாக காயமடைந்து இறந்த மனிதனை ஆறு வாரங்களிற்கு மேலாக அடையாளம் காண முடியாத நிலையில் பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது.
மனிதன் இறந்த பின்னர் எடுக்கப்பட்ட படத்தை வெளியிடல் அவரை அடையாளம் காண உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 12ல் சம்பவம் நடந்தது.
இவரின் தோற்றத்தை ஆகஸ்ட் 24 அதிகாரிகள் வெளியிட்ட போதிலும் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. அடையாளம் காண உதவும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்ய அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
மனிதன் 5.10உயரம் 200இறாத்தல்கள் எடை கட்டையான தோற்றம் சிவப்பு கலந்த-பிறவுன் முடி மற்றும் குறும் தாடி கொண்ட தோற்றமுடைய 25ற்கும் 35ற்கும் இடைப்பட்ட வயது மதிக்கத் தக்கவரெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடைசியாக காணப்பட்ட போது ரி-சேர்ட் மற்றும் நீல கட்டை காற்சட்டை வெள்ளை வரிகளுடன் அணிந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கறுப்பு மற்றும் சில்வர் மவுன்ரின் பைசிக்கிளில் சென்கொண்டிருந்தார்.
தகவல் தெரிந்தவர்கள் 1-888-310-1122என்ற இலக்கத்தில் ஒன்ராறியோ மாகாண பொலிசாருடன் அல்லது அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.