India

7 பேர் விடுதலை பிரச்சினை – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஆளுநர் முடிவு எடுப்பார்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் முடிவெடுப்பார் என தெரியவருகிறது. 

ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

இதைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலாலுக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியது.

இதற்கிடையே ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் உறவினர்கள் ஆளுநரை சந்தித்து 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பன்வாரிலாலை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரும் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது என கேட்டுக் கொண்டனர்.

மேலும் ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த முடிவையும் எடுக்க கூடாது” என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பான மனுவையும் ஆளுநரிடம் தாக்கல் செய்தனர்.

அவர்களது கோரிக்கையையும் ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கும் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகே ஆளுநர் உரிய முடிவை எடுத்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளது. 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top