73-வருடங்களிற்கு முந்தய வெப்பநிலை சாதனை இன்று முறியடிக்கப்படலாம்!

ரொறொன்ரோவில் இன்று 73-வருடங்கள் பழைய வெப்பநிலை சாதனை முறியடிக்கப்படலாம். 73-வருடங்களிற்கு முன் இதே திகதியில் காணப்பட்ட வெப்பம் மற்றும் ஈரப்பதன் மிக்க வானிலை மற்றொரு நாளாக இன்று தொடர உள்ளது.
ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5-மணியளவில் 22 C ஆக இருந்துள்ளது. இந்த அளவு இன்றய நாளின் பிற்பகுதியில 32 C ஆக அதிகரித்து ஈரப்பதனுடன் கூடி 42ஆக உணரப்படலாம் எனவும் கனடா சுற்று சூழல் கணிப்பின் பிரகாரம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு நடக்குமாயின் இந்த வெப்பநிலை இதே நாளில் 1945ல் காணப்பட்ட 31.7 C, சாதனையை முறியடிக்கும் எனவும் கருதப்படுகின்றது. வெப்பம் அதிகமாக இருப்பதால் அனைவரும் வறட்சி நிலையை தவிர்க்க வேண்டும் எனவும் வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியுமாறும் நினைவுறுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே புழுக்கம் மற்றும் ஈரப்பதனான தன்மை காணப் படுகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் ஹமில்ரன் மற்றும் நயாகரா பிராந்தியம் உட்பட்ட பகுதிகளிற்கு வெப்ப எச்சரிக்;கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியின் சராசரி பகல் நேர அதி உயர் வெப்பநிலை 23C