அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கின்றனர் தேசத்தின் வேர்கள் அமைப்பினர்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கடந்த 14 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் 10 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கோண்டு வருகின்றனர் அந்த வகையில் அவர்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிர்வரும் 06.10.2018 ஆம் திகதி காலை 09.00 மணி தொடக்கம் 04 மணி வரை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் தயாராகின்றன.
அதனடிப்படையில் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்கள் சமூக நலன்விரும்பிகள் பொது அமைப்புக்கள் சிவில் அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் என பலரையும் இவ்வடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றனர் தேசத்தின் வேர்கள் அமைப்பினர்.
