News

அந்தமான் தீவுகளில் 5.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று மாலை சுமார் 7 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.  

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக 6 மணி 54 நிமிடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top