News

அனுராதபுர சிறைச்சாலை முன் போராட்டம்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரி, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக, இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபயணமொன்றை ஆரம்பித்திருந்தனர். இந்தப் பேரணி இன்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலையைச் சென்றடைந்தது.

இதையடுத்து, சிறைச்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதில் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top