India

அப்பல்லோவில் ஜெயலலிதாவின் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது இவர்கள் தான் …

ஜெயலலிதாவை அனுமதித்த உடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனுக்கு கடிதம் வாயிலாக கடந்த மாதம் பதில் அளித்தது.

அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவித்தது

இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை கமிஷன் உத்தரவிட்டது.

இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் நேற்று தாக்கல் செய்தது.

அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால் தான் நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top