அமெரிக்காவை மிரட்டும் 13-வது புயல்- மக்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்காவை அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ள நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடர்ந்து புயல் தாக்கி வருகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ளன.
இந்த நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. மைக்கேல் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருகிறது.

மைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் கரோலினா புயல் கியூபாவை தாக்கி விட்டு அமெரிக்காவுக்குள் புகுந்தது. வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினாவை துவம்சம் செய்தது.
Okaloosa/Walton பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் Alabama/Florida பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
2 முதல் 7 செ.மீட்டர் வரை மழை பெய்தது. தற்போது உருவாகியுள்ள மைக்கேல் புயல் காரணமாக மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. பலத்த மழை கொட்டுகிறது. 28 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மைக்கேல் புயல் மிக பயங்கரமான ஒன்று, அது நமது நாட்டின் பல பகுதிகளுக்கு முக்கியமாக Panhandle பகுதிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்த இருக்கிறது என்று கூறியுள்ள ஃப்ளோரிடாவின் கவர்னரான Rick Scott, சாக்குப் போக்கு சொல்ல வழியே இல்லை, தங்கள் குடும்பங்களை பாதுகாப்பதற்காக மக்கள் வீடுகளை விட்டு கண்டிப்பாக வெளியேறித்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.
1,250 National Guard வீரர்களும் 4,000 ராணுவ வீரர்களும் மீட்பு பணிக்காக தயாராக இருக்கின்றனர்.
இந்த புயல் பலத்த மழையையும், மோசமான காற்றுகளையும், பெருவெள்ள அபாயத்தையும் நமது நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு வர உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தயாராக இருக்க வேண்டும்.
வீடுகளை திரும்பக் கட்டி எழுப்பிவிடலாம், ஆனால் உயிர்களை மீட்டெடுக்க முடியாது என்றும் Rick Scott தெரிவித்துள்ளார்.
டல்லாகாசே நகரில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுக்க 2 தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டது.