News

அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் அவசர சந்திப்பு!

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றுள்ள நிலையில் குறித்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் இதன்மூலம் இலங்கை மக்களால் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தம்முடைய பொறுப்புக்களை நிறைவேற்ற இடமளிக்குமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகளுடன் குறித்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top