News

அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் எட்டு தமிழ் அரசியல் கைதிகளில் இருவரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி  சாதகமான நகர்வுகளை முன்னெடுக்கவும் முடியும் என தெரிவித்துள்ள  அரசாங்கம்  ஏனைய மூவரையும் விடுவிக்க  முடியாதென கூறியுள்ளது. 

இதேவேளை தண்டனை பெறப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாளை புதன்கிழமை  ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இலங்கையில் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும்   இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ. சுமந்திரன் எம்.பி நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள  மற்றும் சட்டமா அதிபர்  ஜயந்த ஜெயசூரிய ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  இதன்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top