News

அரச காணியை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – கூட்டமைப்பு!

மட்டக்களப்பு கும்புறுமூலையில் அரச அச்சகக் காணியை இராணுவத்தினருக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சியை உடன் கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்மைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடித்திலேயே அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள, கும்புறுமூலை முச்சந்தியின் அருகில் முன்பு தாபிக்கப்பட்டு யுத்த சூழலினால் பாதிக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் இராணுவத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிகின்றேன்.

இக்காணியில் அரச அச்சக கூட்டுத்தாபனம் உட்பட தொழில் பேட்டைகள் எதிர்காலத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலும், இக் காணியிலோ அல்லது இதற்கு அருகாமையிலோ இராணுவமுகாம் அமைக்கும் திட்டத்திற்கு காணியை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். எனவே இதன் மூலம் பதிலையும், நடவடிக்கைகளையும் கோருகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் ஆளுநர், மாகாண காணி ஆணையாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top