Canada

அவென்யூ பகுதியில் பெண் ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளை: பொலிஸார் தீவிர விசாரணை!

அவென்யூ பகுதியில் பெண் ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவமானது, எக்கிள்டன் அவென்யூ மற்றும் பாத்ரூஸ்ட் தெரு பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று, அவென்யூவின் Forest Hill வீதிகளில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில் கொள்ளையிட்டுள்ளார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு 9.30 மணியளவில் வந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக உரிய நபரை தேடி வருகின்றனர்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top