பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, டொராண்டோவில் இடம்பெற்றுள்ள உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான சி.என். போபுரத்தின் நேற்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில், குறித்த ஆறு பேரும் கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனின் தலைமையில், எட்ஜ்வோக் என்றழைக்கப்படும் 116 மாடிகளை கொண்ட கோபுரத்தில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் விளிம்பில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட குடியுரவு அமைச்சர், கனேடிய குடியுரிமைக்கு வானமே எல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பன்முக கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வரும் கனடா, 2017ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 70 ஆயிரம் புதிய குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
