இந்திய குழு கிளிநொச்சிக்கு விஜயம்

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர், இந்திய வீட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், வீட்டுத்திட்ட பயனாளியாக தெரிவானோரையும் இன்று சந்தித்தனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீட்டுத்திட்ட மாதிரிகளை பார்வையிட்ட குழுவினர் பயனாளிகளிடமும் கேட்டறிந்துகொண்டனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்ட குழுவினர் அங்குள்ள மக்களிடம் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.
இதன்போது மக்கள் குறித் வீடுகள் உரிய முறையில் அமைக்கப்படாமையால் பெரும் பாதிப்புக்களை எதி்ர்கொண்டுள்ளதாக அவர்களிடம் கூறினர்.
தொடர்ந்து வீடுகள் இல்லாது தற்காலிக வாழ்விடங்களில் வாழும் மக்களின் நிலை தொடர்பிலும் நேரில் பார்வையிட்டு மக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடதக்கது.