ஈட்டோபிக்கோ பகுதியில் TTC உடன் கார் மோதி விபத்து: ஆறு பேர் காயம்

ஈட்டோபிக்கோ பகுதியில் TTC பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Islington avenue மற்றும் Cordova avenue பகுதியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த கார் பேரூந்துடன் மாத்திரமன்றி கம்பம் ஒன்றுடனும் மோதுண்டு பலத்த சேதத்திற்கு உள்ளானதாகவும், பேரூந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமானதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின்போது பேரூந்தில் இருந்த இருவரும், காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர் என்று மொத்தம் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.