News

உலகில் மிகவும் வயதான ரஷ்யாவை சேர்ந்த 129 வயது பாட்டி!

ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற 129 வயதாகும் பாட்டிதான் உலகின் மிக வயதான பெண்மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை பிறப்பிடமாக கொண்டு 1889 ஆம் ஆண்டு பிறந்த கோபு இரண்டாம் உலகப்போரின் போது தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்ததாக கூறியுள்ளார்.

.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோபு பாட்டி , நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுக்கும் தண்டனை தான் எனகூறியுள்ளார்.

மேலும், என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நாள் என்றால் அது நான் முதலில் என் வீட்டிற்குள் நுழைந்த நாள் தான் என்றார்.

பிரான்ஸ் நாட்டை சார்ந்த ஜெனனி காலெம்ட் தான் உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று அழைக்கப்பட்டவரவர்.

இவர் தான் உலகின் மிக நீண்ட நாள் வாழ்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு 122 வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top