News

ஊழியர்களுக்கு முன் நிர்வாணமாக நடக்க வற்புறுத்திய பொலிஸ்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…

பிரித்தானியாவில் நிர்வாணமாக நடக்குமாறு பெண் சிறைக்காவலர் வற்புறுத்தியதால் இளம்பெண் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேட்டி ஆலன் (21) என்ற மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சாலையில் வேகமாக காரில் சென்றுள்ளார்.

மது போதையில் இருந்த கேட்டி (15) வயது சிறுவனான மைக்கேல் கீனன் மீது காரை ஏற்றிவிட்டு சென்றுவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சிறுவன் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினான்.

இதற்கிடையில் காரின் எண்னை வைத்து கேட்டியை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மைக்கேலின் பெற்றோர், கேட்டி எங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். அன்று விபத்து நடந்ததே தனக்கு தெரியாது என கேட்டி எங்களிடம் வேதனை தெரிவித்துவிட்டார் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் குற்றவியல் நீதிமன்றம் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் சிறைக்காவலர், கேட்டியை சக ஊழியர்கள் முன்பு நிர்வாணமாக நடக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த கேட்டி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top