Canada

கஞ்சா போதைப் பொருள் விநியோகத்தில் முதலிடம் பிடித்த கனடா!

உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் கனடா அரசு வெளியிட்டது.

பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கனடாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரேடாரில் கஞ்சாவை அதீதமாக விரும்பும் தரப்பினர் முதன்முதலில் விற்பனையை ஆரம்பித்து வைத்தனர்.

விற்பனை தொடக்கத்திலேயே, சென். ஜோன்ஸில் உள்ள கெனோபி க்ரோவ்த் கூட்டுத்தாபனத்தின் டுவீட் பிரான்ட் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக குளிரையும், காற்றையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்காணக்கானவர்கள் அணிவகுத்து காத்திருந்தனர்.

இந்த நிறுவனமே உலகின் அங்கீகரிக்கப்பட்ட கஞ்சா போதைப் பொருள் உற்பத்தி அமைப்பாகும்.

எனினும், இந்த நடவடிக்கை குறித்து டொரொண்டோ மற்றும் வான்கூவர் போன்ற பெரு நகரங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top