கனடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து !

கனடாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான இர்விங் ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கனடாவில் நியூ பர்ன்ஸ்விக் எனும் இடத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது.

இந்த ஆலையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகமும், அதிக அளவு எண்ணெய் இருந்ததாலும் தீயின் வேகம் கட்டுக்கடங்காமல் போனது.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், கட்டுக்கடங்கா தீயினை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ற்றுக்கும் அதிகமான பீப்பாய்களில் எண்ணெய் இருப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் புகை வெளியேறுவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
டீசல் அலகு ஒன்றின் செயலிழப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,நூற்றுக்கும் அதிகமான பீப்பாய்களில் எண்ணெய் இருப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் புகை வெளியேறுவதாகவும் தீயணைப்பு துறையினர் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இர்விங் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கனடாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். இதில் சுமார் 1,400 பேர் பணி புரிகின்றனர். 300 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 320,000-க்கும் மேற்பட்ட பீப்பாய்களில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
எனினும்,அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.