Canada

கனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை!

கனடாவில் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பபானது வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பானது, ரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான, வடக்கு யோர்க் மற்றும் டர்ஹாம் பகுதிகளுக்கு, கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பபானது கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக கனடா சுற்றுச் சூழல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பில்,

வாகன ஓட்டிகள் வாகனம் இயக்கும் போது சுமார் 200 மீட்டருக்கு எந்த ஒரு அசைவும் தெரியாது என்பதால், மின் விளக்குகளை ஒளிரச்செய்து வாகனத்தை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நியூமார்க்கெட்டிலிருந்து ஹூரன்-பெர்த் மற்றும் பார்ரி ஆகிய பகுதிகளில் அதிக ஈரப்பதனுடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முடிந்த வரை வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top