Canada

கனடாவில் கைத்துப்பாக்கிகளை தடை செய்யும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானம்!

கனடாவில் கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ஆயுதங்களைத் தடைசெய்வது தொடர்பாக மக்களிடையே ஆலோசனை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, மத்திய எல்லைப் பாதுகாப்பு துறை அமைச்சர் பில் பிளையரால் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் கூறும்போது, கனடாவில் கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ஆயுதங்களைத் தடைசெய்வது தொடர்பாக, வருகிற நவம்பர் 10ஆம் நாள் வரையில் இணையம் மூலமாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று விபரம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சமூக பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடப்படும் எனவும், அதற்காக வட்டமேசை மாநாடுகள் ஒழுங்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது

மேலும், கனடாவில் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் கடப்பாட்டினைக் கொண்டுள்ள மத்திய அரசாங்கம், இந்த தடை குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், பல்வேறுபட்ட கருத்துக்களை கேட்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top