Canada

கனடாவில் பிரமிக்கவைக்கும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு !!

கனடாவில் பிரமிக்க வைக்கும் தமிழர் பண்பாடு மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் எனவும் மீண்டும் கனடா வர இருக்கும் ஒரிசா பாலுவின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடா பழங்குடியின மக்களின் வாழ்வில் பிரமிக்க வைக்கும் தமிழர் பண்பாடு உள்ளதாக ஏற்கனவே கடல் சார் தமிழ் பண்பாடு ஆய்வாலர் ஒரிசா பாலு தெரிவித்து இருந்தார் அதன் தொடர்ச்சியாக மீண்டும் அழைப்பின் பேரில் வர உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,உலக அளவில் மக்களின் வாழ்க்கை வரலாறு, பண்பாடு வரலாறு, பாரம்பரிய வரலாறு போன்றவை அம்மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் கால அளவை மையமாக கொண்டு கணிக்கலாம்.

அந்த வகையில், உலக வரலாற்றில் பண்டைய நாகரீகம் 17 லட்சம் ஆண்டுகள் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் வரையில் தமிழர்கள் வாழ்ந்த தடயங்கள் ஆமை வழிப்பாதையின் கடல் பயணம் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழர்களின் கடல் வழிப்பயணத்தில் அக்கறை சீமையான மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், பர்மா, இந்தோனேசியா, பப்புங்கோனியா, மைக்ரோ நேசியா, பாலி நேசியா, பிலிபைன்ஸ், சீனா, கொரியா, ஜப்பான், சைபீரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெரு, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு தமிழர் வரலாற்று உண்மை அடையாளங்கள் ஏராளம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனுடன், இந்த நாடுகளில் இருந்து, மற்ற நாடுகளுக்கு சென்ற கடல் பயணத்தின் வழித்தடங்களை அடிப்படையாக கொண்டு, 48 நாட்டு குடிமகன்களாய் கடவு சீட்டுகளுடன் உலகின் 191 நாடுகளில் தமிழர் அடையாளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், கனடாவில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள், பழங்கால குறியீடுகள், பானை ஓடுகள், மக்கள் வழக்கத்தில் உள்ள தமிழ் மொழி, வாழ்வியல் முறைகள், பண்பாடு செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், உறவு முறைகள், விருந்தோம்பல் போன்ற தரவுகள் அடிப்படையில் கனடாவில் தமிழர் தொன்மம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் மூத்த இனமாக தமிழ் இனம், மங்கோலியா இனம் கருதப்படுகிறது.இதில், தமிழ் இனமே உலக அளவில் வணிகம் செய்ததற்கான, ஆட்சி புரிந்ததற்கான தரவுகள் பெருமளவு கிடைத்து வருகின்றன.

அதாவது, கனாடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்காவில் இருந்து “பேரிங் நீரணை” என்ற பகுதியில் இருந்து மக்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.

பேரிங் நீரணை என்ற இப்பகுதியை வந்தடையும் அலாஸ்கா பகுதியில் “அட்டு”, “இனியன்” என்ற தமிழ் பெயர்களை கொண்ட தீவுகள் உள்ளன.

கனடாவின் பசுபிக் ஆழ்கடல் பகுதி அருகே சாம்சட்கோ என்ற தீபகற்பகத்தில் கரையோக், நிமியோ, ஆயி, யூபிக் என்ற இன குழு மக்கள் வசித்து வந்தது அறியப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கனடாவின் வரலாற்றில் முதல் மரபு மக்கள் என்று அறியப்பட்டவர்களில், தமிழரின் பழமையான பெயர்களான ஆயி, கூட்டணி, காமாட்சி, கரையோக், கிரி என்ற பெயர்களை கொண்டு, இந்நாட்டின் பூர்வ பழங்குடி மக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கனடாவுக்கு பயணம் செய்த பூர்வகுடி மக்கள் தமிழர்களாக இருக்க கூடும்.

அதுமட்டுமில்லாமல், கனடாவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அத்தபஸ்கன், துச்சோனே, கைணை, பீகன், சிப்பியோன், கிரி என்ற மக்கள் இருந்ததாகவும், அந்த மக்கள் கருப்பு நிறம் கொண்டவர்களாவும் இருந்தனர் என அறியப்படுகிறது.

இதன் மூலம், இந்தோ பசுபிக் கடலோடிகளான தமிழர்கள் கனடாவில் வணிக தொடர்பு வைத்திருந்ததற்கான அடிப்படை ஆதாரமாக உள்ளது.

மேலும், கனடா நாட்டின் ஒண்டோரியா மாகானத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்தே வேலூர் என்ற தமிழ் மொழியிலான ஊர் பெயர் வழக்கத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் 450 கோயில்களில் ஆமை வழிபாடு உண்டு. அதுபோல், கனடாவில் உள்ள பழங்குடியின மக்களின் வழிபாட்டு முறையில் ஆமை வழிபாடு இருப்பது தமிழருடனான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

உலக அளவிலான வணிகத்தில் கருப்பு தங்கம் என்று சொல்லக்கூடிய மிளகு வணிகத்தை தமிழர்கள் செய்து வந்தனர்.இறந்தவர்கள் உடல் கெட்டு போகாமல் பாதுகாப்பதற்கும், உயிருடன் இருக்கும் நபர்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் கொண்ட பொருளாக மிளகு உள்ளது. அதனால், தமிழர்கள் மிளகை உலக அளவில் வணிகம் செய்தனர்

கனடாவில் மிளகு பயன்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம், தமிழர்களின் வணிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில் இருந்தது உறுதிப்படுத்தப்படுகிறது.

அதனுடன், கனடா பழங்குடி மக்களின் இசைக்கருவியில் தமிழர்களின் பாரம்பரிய இசைக்தோல் கருவிகள், நரம்பு கருவிகள், துளை கருவிகள் இன்றளவும் இருந்து வருகிறது. உடையில் சோலியும், உணவில் ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களும் சேர்த்துக்கொண்டது தமிழர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

உலகின் மூத்த குடி, முதன்மை குடி தமிழ் குடி என்பதை விளக்கும் வகையில் தொல்லியல் தரவுகள் இருப்பது போல், இலக்கிய தரவுகளும் உண்டு. அதாவது, தமிழகத்தில் 9ம் நூற்றாண்டில் “புறப்பொருள் வெண்பாமாலை” எழுதிய ஐயனாரிதனார் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கனடாவில் மட்டுமில்லாமல், உலக அளவில் தமிழர் அடையாளங்கள் இருப்பது தரவுகள் மூலம் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கடல் பயணத்தில் சிறந்து விளங்கிய பண்டைய தமிழர்கள் தற்போதைய காலக்கட்டத்திலும் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மூலம் கூட கண்காணிக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர்கள் 2010ம் ஆண்டு கனடாவுக்கு பயணம் செய்துள்ளனர். அதாவது, தாய்லாந்தின் சொங்லா என்ற இடத்தில் இருந்து வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் வழியாக பசுபிக் ஆழ்கடலை ஊடுருவி கனடாவை வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக இப்பயணம் மேற்கொண்டதால் கப்பலில் பயணித்த 492 ஈழத் தமிழர்கள் கனடா அரசு ஏற்றுக்கொண்டது.

இச்சம்பவம் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. விவேகானந்தர் இந்த நாட்டில் இருந்து கப்பல் வழியாக ஐப்பானை சென்றடைந்து கனடா வான்கோவர் சென்றது போன்ற மரபுசார் அறிவுடன் கூடிய கடல் வழிப் பயணத்தின் மூலமே இது சாத்தியப்படும் என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு அதிகளவில் தமிழர்களே வேலைக்காக செல்கின்றனர். பூர்வகுடி தமிழர்களின் கனடா கடல் பயணத்தின் வழித்தோன்றல் காரணமாகவே ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்றளவும் கனடாவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

அப்போதைய காலக்கட்டத்தில் வணிகம் சார்பில் பயணம் செய்தவர்கள் தற்போது தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக பெருமளவு பயணம் செய்து வருகின்றனர். தமிழர்களின் சுய அறிவு, சுய திறன் போன்றவற்றை மீண்டும் வெளிகொண்டு வந்து, பண்டைய தமிழர்களின் வணிகத் திறனை அடிப்படையாக கொண்டு, தமிழர்கள் மீண்டும் கனடாவுடன் வணிகம் செய்ய வேண்டும். அதுபோல், உலகளாவிய தமிழர்கள் ஒன்றுகூடி உலகளவிலான தமிழர் வணிகத்தை மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம், தமிழர்களுக்கு சொந்தமான, நம்பமுடியாத பல திறமைகளை தமிழர்களே புதியதாக உணர்வார்கள். அதற்காக, உலக அளவில் கொடிகட்டி பறந்த தமிழரின் ஆட்சி முறை, வணிகம், நிர்வாகம், பன்முக திறமை போன்றவற்றை அறிய தமிழர்கள் முனைப்பு காட்ட வேண்டும். அதாவது, தமிழர்களை பற்றி தமிழர்கள் முதலில் அறிய வேண்டும். இதன் மூலம், உலகிற்கு நாகரீகம், வணிகம், ஆட்சி முறை, மருத்துவம், வீரக்கலை, கட்டடக் கலை, இலக்கியம் கற்றுக் கொடுத்த தமிழர்கள் மீண்டும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top