கழுத்தறுக்கப்பட்டு தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை

அவுஸ்திரேலியாவில் கழுத்தறுக்கப்பட்டு தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய குழந்தை அறையில் விளையாடி கொண்டிருந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் Wollongong பகுதியை சேர்ந்தவர் Kristie Powell (39). தனியாக தன்னுடைய குழந்தையுடன் வாழ்ந்து வரும் Kristie, நேற்று அதிகாலை கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Kristie-ன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டின் உள் அறையில் எந்த வித காயங்களுமின்றி இருந்த அவருடைய குழந்தையை மீட்டு Kristie-ன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்த Kristie-ன் தலை மற்றும் உடல் பகுதியில் ஒரு கூர்மையான பொருளை பயன்படுத்தி குற்றவாளி தாக்கியிருப்பதாகவும், அதற்கான காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், அவருடைய முகப்புத்தக பதிவை வைத்து பொலிஸார் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

அதில் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் Bhanu Kirkman, 29 எனவும், இந்தியா அல்லது அதன் துணைக்கண்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை பற்றிய தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
