News

காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்!

30 வருடகால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்று காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முதியோர் தினம் என்பது எங்களுடைய கலாசாரத்தை பொறுத்தவரையில் ஒரு தேவையில்லாத விஷயமாக இருந்தாலும் கூட நாங்கள் பல காரியங்களை காரணம் தெரியாமல் நாங்கள் செய்து வருகிறோம். சில வேளைகளில் அது வேடிக்கையாகவும் இருக்கும்.

முப்பது வருடகால யுத்தத்தில் எங்களுடைய சமுதாயத்தில் சமுதாயத்திற்கு ஒவ்வாத பல விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறன.

ஆனால் அந்த சமுதாயத்திற்கு ஒவ்வாத விடயங்களை செய்தவர்களே அந்த விடயங்களுக்கு எதிர்ப்பாக இப்போது போராட்டங்களை செய்கிறார்கள், அதை பற்றி பேசுகின்றனர்.

காணாமல் போனவர்களை எடுத்துக் கொண்டால் இந்த 30 வருட கால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்றைக்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காணாமல் போனவர்கள் ஏன் காணாமல் போனார்கள் எவ்வாறு காணாமல் போனோர் போன்ற பலரின் விடயங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு தெரியும்.

ஏன் எனில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் காணாமல் போக செய்தவர்கள் ஏன்றும் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top