Canada

கார்பன் வரித் செலுத்தா திட்டம் பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இன்று அறிமுகம்!

தேசிய திட்டத்துடன் உடன்படாத மாகாணங்களுக்கான மத்திய அரசாங்கத்தின் புறம்பான புதிய திட்டதினை பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகம் செய்ய உள்ளார்.

கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பச்சைவீட்டு விளைவு வாயுக்களில் கார்பன் உள்ளடங்கிய வாயுக்களை சூழலில் வெளியிடும் செயற்பாட்டிற்கு வரியை செலுத்தும் திட்டமானது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது, வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் வாயுக்களுக்கான வரியைச் செலுத்தும் கார்பன் வரித் திட்டமாகும்.

இருப்பினும், வரியைச் செலுத்த சில மாகாணங்கள் மறுத்து வருவதால், காலநிலை தொடர்பான தேசிய செயற்திட்டத்துடன் இணங்காத மாகாணங்களுக்கான மத்திய அரசாங்கத்தின் புறம்பான திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதனை மாசுபடுத்தலுக்கான தண்டப்பணம் என கனடாவில் அழைக்கப்படுகின்றது.

குறித்த தண்டப்பணத்தைச் செலுத்த மறுத்த மாகாணங்களுக்கான பிரதியீட்டுத் திட்டத்தை இன்று வெளிப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top