Canada

கியூபெக்கில் பொது இடங்களில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தடை!

கியூபெக்கில் பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் கஞ்சா போதைப்பொருள் பயன் பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் (Quebec) என்பது கனடாவின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஒரு மாகாணம் ஆகும்.

மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள இந்த மாகாணத்தில் பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் கஞ்சா போதைப்பொருள் பயன் பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களுக்கு 150 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாரதத்தை பொருட்படுத்தாது, தொடர்ந்து கஞ்சா போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அபராதத் தொகை 1000 டொலர் வரை அதிகரிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கியூபெக் மேயர் கூறும்போது, கனடாவில் கஞ்சா பாவனை வரும் நவம்பர் 17ஆம் திகதி முதல் சட்டபூர்வமாக்கப்படவுள்ள நிலையிலேயே, பொது இடங்களில் கஞ்சா பாவனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top