News

கிளிநொச்சியை வந்தடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி!

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்றுக்காலை நடைபவனியை ஆரம்பித்தனர்.

பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி நேற்று இரவு இயக்கச்சியுடன் நிறைவுபெற்றது. இன்று அங்கிருந்து ஆரம்பித்த நடைபவனி கிளிநொச்சி நகர்வரை சென்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்தில் மதிய நேர உணவினை முடித்துக் கொண்டு கொக்காவில் நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த நடைபவனிக்கு கிளிநொச்சி மக்கள் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

Latest News

To Top