News

குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்

யாழ், தீருவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட இருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதையடுத்து குறித்த நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபையில் ஆளும் தரப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட இருந்தது.

குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் வீரச்சாவடைந்த தினமான இன்று குறித்த தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கருணாநந்தராசா ஆகியோர் தலைமையில் மேற்கொள்ள இருந்தது.

குறித்த ஏற்பாடுகள் இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வல்வெட்டித்துறை நகரசபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து இதை இடைநிறுத்துமாறு கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளை மட்டும் நினைவுகூரப்பட்ட இப் பிரதேசத்தில் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சகல இயக்கங்களையும் நினைவுகூரும் வகையில் இந்த நினைவு தூபியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து தமது எதிர்ப்பை மேற்கொண்டதுடன் ஏற்பாட்டாளர்களை அங்கிருந்து செல்லுமாறும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரு தரப்பினர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் அடிக்கல் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக கூறி பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கமைய இந் நிகழ்வை நிறுத்தி நீதிமன்றதிற்கு வருமாறு அழைப்புக் கட்டளை விடுக்கப்பட இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அடிக்கல் நாட்ட முடியாது என்று கூறியிருந்துள்ளனர்.

நீதிமன்றத்தில் பெறப்பட்ட அறிவித்தலை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் கொடுப்பதற்கு பொலிஸாரும் முயன்றுள்ளனர்.

ஆனபோதிலும் அவர்கள் அதனைப் பெறவில்லை. இதனையடுத்து நீதிமன்ற அறிவித்தலை அந்த இனத்தில் பொலிஸாரும் வாசித்துக் காட்யுள்ளனர். அதன் போது சிவஜிலிங்கம் மற்றும் தவிசாளர் ஆகியோர் காதைப் பொத்திக் கொண்டு நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top