குறைந்தபட்ச ஊதியத்தை 15 டொலராக அதிகரிக்க வலியுறுத்தி நோவா ஸ்கோடியா மாகாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள நோவா ஸ்கோடியா மாகாணத்தின் நேற்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள், ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஸ்கோடியா மாகாணத்தின் அருகில் அமைத்துள்ள கிளம் நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள், குறைந்தபட்ச ஊதியத்தை 11 டொலரில் இருந்து 15 டொலராக அதிகரிக்க வலியுறுத்தி நூலகத்தின் முன்னிருந்து தொழிலாளர் அமைச்சு மற்றும் உயர்கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை ஸ்கோடியாவின் குறைந்தபட்ச ஊதியமானது 11 டொலராகக் காணப்படுகிறது.
மேலும், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் மாகாணமாக நோவா ஸ்கோடியா விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.