News

குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் தாயின் மார்பகத்தை துளைத்த 12 தோட்டாக்கள் !!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது தன்னுடைய குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாய் 12 தோட்டாக்களை தன்னுடைய மார்பு பகுதியில் வாங்கியபடியே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கவை சேர்ந்த Dawn Boyd என்ற 22 வயது பெண் தன்னுடைய 11 மாத குழந்தை மற்றும் நண்பர்கள் 3 பேருடன் இரவு 9.30 மணியளவில் நண்பரின் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது வேகமாக காரில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்து பதறி போன Dawn, உடனடியாக தன்னுடைய குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இதில் பறந்து வந்த குண்டுகள் அனைத்தும், Dawn உடைய மார்பு, கை, கால்களில் பாய்ந்தது.

அதேசமயம் அவருடன் நின்று கொண்டிருந்த 35 வயது நபருக்கு இடது கையிலும், 21 வயது இளைஞருக்கு கால் பகுதியிலும் 24 வயது நபருக்கு மார்பு பகுதியிலும் குண்டு பாய்ந்தது.

இந்த சம்பவம் அறிந்த விரைந்து வந்த பொலிஸார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், Dawn அடுத்த சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயதுடைய அவருடைய நண்பர் அடுத்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில் அந்த 11 மாத குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் இதுவரை சம்மந்தப்பட்ட நபர் மற்றும் கார் குறித்த எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து Dawn பெற்றோர் கூறுகையில், நல்ல வேளையாக எங்களுடைய பேத்திக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ‘என் மகள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது, ​​அவள் உயிரை இழந்துவிட்டாள், அவளை ஒரு கதாநாயகியாக நாங்கள் கருதுகிறோம்.’ என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top