Canada

கென்னடி ஸ்டேஷன் பகுதியில் சம்பவம்! இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் ..

கென்னடி சுரங்க ஸ்டேஷன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரங்க நிலையத்தில் நேற்று மாலை 6 மணிக்கு மூன்று ஆண்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இரு நபர்களுக்கிடையிலேயே மோதல் இடம்பெற்றதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் இந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top