News

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொரியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை உட்படவெளிநாட்டு பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள், எவ்வித தண்டணையோ, அபராதமோ விதிக்கப்படாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக 3 மாத பொது மன்னிப்பு காலத்தை கொரியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் இந்த பொதுமன்னிப்பு காலமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், குறித்த 3 மாத பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள் தாமாகவே அங்கிருந்து வெளியேறாவிட்டால், அவர்களை கைதுசெய்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன், அவர்கள் மீண்டும் கொரியாவுக்குள் வரமுடியாத வகையில் 10 வருட தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, வெளிநாடுகளுக்கு கொரியா அறிவித்துள்ளதாக, ​கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top