News

சர்வதேச தடைகளிலிருந்து மகிந்தவை நாங்களே காப்பாற்றினோம்- மங்கள

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சசை சர்வதேச பயண தடைகள் உட்பட பல தடைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கமே காப்பாற்றியது என அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து உள்ள விசாரணையை நடத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்கச்செய்தது தற்போதைய அரசாங்கமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள்   அரசாங்கத்தை அமைத்தவுடன் வெளிவிவகார அமைச்சர் என்ற அடிப்படையில் நான் ஜெனீவாவிற்கும் நியுயோர்க்கிற்கும் விஜயம் மேற்கொண்டு நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம் யுத்தத்தின் போது தவறுகள் இழைக்கப்பட்டால் நாங்கள் உரிய நடவடிக்கையை எடுப்போம் சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நடத்துவோம் என உரையாற்றினேன் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகயிருந்தால் கூட சட்டத்தின் முன்னாள் அவரையும் சமமாகவே கருதுவோம் என தெரிவித்தேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால் மகிந்த சர்வதேச நீதிமன்றத்தினால் கூட தண்டிக்கப்பட்டிருப்பார் என தெரிவித்துள்ள மங்களசமரவீர நாங்கள் ஆட்சிக்கு வந்திராவிட்டால் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக பயண தடைகளை சர்வதேச சமூகம் விதித்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top