News

சுடுகாட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 11 குழந்தைகளின் அழுகிய சடலங்கள் !

அமெரிக்காவில் மூடப்பட்ட சுடுகாட்டில் 11 குழந்தைகளின் சடலங்களை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டிட்ரோய்ட் நகரில் உள்ள பொலிசாருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது.

அதில் சில காலமாக மூடப்பட்டுள்ள கேண்ட்ரில் சுடுகாட்டில் உள்ள மேற்கூரையில் 11 குழந்தைகளின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அங்கிருந்த 11 குழந்தைகளின் சடலங்களை அழுகிய நிலையில் கண்டெடுத்தனர்.

வேறு ஏதேனும் சடலங்கள் உள்ளதா என மோப்ப நாய் மூலம் தேடப்பட்ட நிலையில், சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

குறித்த சுடுகாடானது சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டுள்ளது.

சுடுகாட்டை சமூக மையமாக மாற்றுவதற்காக அதை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அங்கு எப்படி 11 சடலங்கள் வைக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top