ஜனாதிபதி ஐ.நாவில் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு !!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட பேரணி இன்று மட்டக்களப்பு பிரதான சுற்றுவட்டத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த போராட்டத்தின் போது வட, கிழக்கு மாவட்டங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவிகள் கலந்து கொண்டு அவர்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

.தன்போது ஜனாதிபதி ஐ.நாவில், தமது நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்ப்போம் என்று வெளியிட்டிருந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
