News

ஜனாதிபதி படுகொலைச் சதி – கோத்தாவிடம் 2 மணிநேரம் விசாரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று இரண்டு மணி நேரம் கோத்தாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தினர்.

முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கே இவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top