India

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை சசிகலா முடிவு செய்தாரா?: டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை முடிவு செய்யும் அதிகாரம் சசிகலாவிடம் இருந்தது என்று அப்போலோ டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் பாபு மனோகரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  நடத்தினார். இந்த விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கூடிய அதிகாரம் சசிகலாவுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவிற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது  தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை சிவக்குமார் சசிகலாவிடம் தெரிவிப்பார். சசிகலா தான் அவருக்கு அளிக்க கூடிய சிகிச்சையை முடிவு செய்வார் என்று வாக்குமூலம்  அளித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர்கள் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினார்கள்.

 இது  தொடர்பாக சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, நான் அறைக்கு வெளியே தான் இருந்தேன். இதனால், உள்ளே அவர்கள் என்ன  பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. யலலிதாவிடம் பேசி முடித்து விட்டு வெளியே வந்த ரிச்சர்ட் பீலே மட்டுமே இதுபோன்ற அயர்ன் லேடியை பார்த்ததில்லை என்று சொல்லிக்கொண்டே  வெளியே வந்தார். அதன்பிறகு அவர் வெளிநாடு கொண்டு செல்வது தொடர்பான பேச்சே இல்லாமல் போய் விட்டது. என்னுடைய கருத்து என்னவென்றால், உலக தரமான சிகிச்சை அளிக்க அனைத்து  வசதிகளும் அப்போலோ மருத்துவமனையில் உள்ளது. எனவே, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்பதே எனது கருத்து. ஜெயலலிதாவை தினமும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது. அவர் என்னிடம் இயல்பாக பேசுவார். அவரது உடல் நிலையை தொடர்ந்து பரிசோதனை செய்து வந்ேதன். ஜெயலலிதா தன் உடலில்  பிரச்னை ஏதாவது இருந்தால் என்னிடம் கூறுவார்.  நான் அது தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கேட்பேன். அதன்பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அப்போலோவில் அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை  அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top