ஜேர்மனியில் ஆறு வலதுசாரி தீவிரவாதிகள் கைது !!

ஆயுதம் தாங்கிய வலதுசாரி தீவிரவாத அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டதாக இன்று ஜேர்மனியில் ஆறுபேரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Saxony மற்றும் Bavariaவைச் சேர்ந்த அந்த ஆறுபேரும் வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளின் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது வன்முறை மற்றும் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஜேர்மனி ஒன்றிணைந்த நாளை புதன்கிழமை நாடே கொண்டாட உள்ள நிலையில் இந்த தாக்குதலை நிறைவேற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Chemnitzஇல் நடைபெற்ற தாக்குதலிலும் இந்த ஆறு பேரும் பங்கேற்றதாகவும், பல அகதிகளை தாக்கி காயப்படுத்தியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்டவர்களில் ஒருவரின் தலையின் பின்பக்கத்தில் கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
புதன்கிழமை நடத்த இருக்கும் தாக்குதலுக்கு ஒரு சோதனை முயற்சியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல