News

ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஏராளமான பிரித்தானியர்கள்: 40 மடங்கு அதிகரிப்பு..

பிரெக்சிட்டுக்குப் பின்னும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களாக தொடர்வதற்காக, ஏராளமான பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நாஸிக்கள் யுகத்தில் சித்திரவதைக்குளானவர்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு சட்டத் திருத்தம் ஒன்றை பயன்படுத்தி ஜேர்மன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை, 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பின்பு 40 மடங்கு அதிகரித்துள்ளது.

2015ஆம் ஆண்டு, வெறும் 43 விண்ணப்பங்கள் மட்டுமே வந்த நிலையில் 2016ஆம் ஆண்டு, அதுவும் பிரெக்சிட் வாக்கெடுப்பு தினமாகிய ஜூன் 23ஆம் திகதிக்கு பிறகு அந்த எண்ணிக்கை 584ஆக உயர்ந்தது.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,667ஆக உயர்ந்தது. ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் யூதப் பாரம்பரியம் கொண்டவர்கள்.

ஜேர்மன் அரசியல் சாசனம் பிரிவு 116 – 2இன்படி, அடால்ஃப் ஹிட்லர் ஜேர்மன் சான்ஸலர் ஆன ஜனவரி 30, 1933இலிருந்து, 1945ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி ஜேர்மனி சரணடைந்த நாள் வரை, அரசியல், இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் தங்கள் குடியுரிமையை இழந்த முன்னாள் ஜேர்மானியர்கள் மீண்டும் தங்கள் குடியுரிமையை கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top