Canada

டொரொன்டோவில் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு; பொலிஸார் விசாரணை!

டொரொன்டோவில் மூன்று மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவமானது, டொரொன்டோ நகரின் கிழக்கு மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தாக்குதலின் குறித்த அறிகுறிகளுடன் காணப்பட்ட குழந்தையை கண்டு டொரொன்டோ பொலிஸார் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிக்சை பலன்றி ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக டொரொண்டோவின் மத்தேயு பொஃபர்ட் (29) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கட்கிழமை இன்று ஒரு பிந்தைய மரண பரிசோதனை நடைபெற உள்ள நிலையில், வழக்கு பதிவு செய்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top